About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, March 18, 2017

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன், 81+ வயது இளைஞர்

14.03.2017 செவ்வாய்க்கிழமை மாசி+பங்குனி கூடும்
காரடையான நோன்பு விரத தினமாக நேரிட்டதாலும்
அன்று பகல் முழுவதும் பட்டினியுடன் விரதமிருந்து
மாசி மாதம் இருக்கும் போதே, அதாவது 
பிற்பகல் 4.30க்கு மேல் 4.45 மணிக்குள் 
பூஜையில் கொழுக்கட்டைகள் நைவேத்யம் செய்து, 
என் வீட்டுப் பெண்கள் கழுத்தில் சரடு கட்டிக்கொள்ள 
வேண்டியிருந்ததாலும், மறுநாள் மிகவும் டயர்ட் ஆகிவிட்டனர்.
 அதனால் மறுநாள் 15.03.2017 வருகை தந்திருந்த முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களை, மதிய உணவுக்காக, என் வீட்டின் மிக அருகே உள்ள மதுரா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க நேர்ந்தது. இருப்பினும், அன்றைய தினம் அங்கு அளிக்கப்பட்ட ஸ்பெஷல் சாப்பாடு, தினமும் சாப்பிடும் என் வீட்டு சாப்பாட்டையும் விட மிகவும் அருமையாகவும் ருசியாகவும் இருந்ததாக என்னால் உணர முடிந்தது.

இந்த மேற்படி காரடையான் நோன்பு என்பது பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் படங்களுடன் கூடிய என் பழைய பதிவான ‘தீர்க்க சுமங்கலி பவ!’ என்பதைக் கண்டு களிக்கவும். இதோ அதற்கான இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_9400.html

சென்ற பதிவின் இறுதியில் நான் கொடுத்துள்ள சில கேள்விகள் இதோ:

முனைவர் பழனி கந்தசாமி ஐயா 15.03.2017 திடீரென்று
திருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்?

மாலை 6 மணிக்கு 
சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்  
மாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு
என்னுடன் எங்கு புறப்பட்டார்?

அங்கு வந்திருந்த இதர பதிவர்கள் 
யார் யாரை இவர் சந்தித்தார்?

அங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது?

போன்ற மற்ற சுவையான விபரங்களுக்கு
இப்போது நாம் விடை காண்போம்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு
கலைஞர் அறிவாலயம் தாண்டி எதிர்புறமாக 
அமைந்துள்ளது ’தாஜ் திருமண மஹால்’

15.03.2017 புதன்கிழமை 
மாலை 6.30 முதல் அங்கு
ஓர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 
+
மல்லடி சகோதரர்கள் குழுவினரின் 
கர்நாடக இசைக் கச்சேரிகள்  
+
இரவு டின்னர்

16.03.2017 வியாழக்கிழமை 
காலை 8 to 9 திருமணம்


மணமகள்: 
செளபாக்யவதி. 
நித்யா ராமமூர்த்தி
[நம் ’ஆரண்ய நிவாஸ்’ வலைப் பதிவர்
திரு. R. ராமமூர்த்தி அவர்களின் பெண்]
மணமகன்:
சிரஞ்சீவி: விக்னேஷ் ஸ்வாமிநாதன்

[பொண்ணு மாப்பிள்ளை மேடைக்கு வந்ததும்
 ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து 
மகிழும் போது எடுக்கப்பட்ட படம் இது]


-oOo-

என் வீட்டிலிருந்து முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களை ஓர் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்று மாலை 6.10 க்குப் புறப்பட்டேன். அடுத்த 10  நிமிடங்களில் திருமண மண்டபத்தை நாங்கள் அடைந்தோம்.

எங்களை அன்புடன் வரவேற்ற 
ஆரண்யநிவாஸ் தம்பதியினருடன்
முனைவர் ஐயாவும் அடியேனும்
மேடையில் மணமக்களுடன் சில BHEL நண்பர்கள் 
மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள 
ஒரு சில கலை நுட்பமானப் பொருட்கள்
பார்வையாளர்களின் ஓர் பகுதி
பதிவர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுடன் 
முனைவர் கந்தசாமி ஐயா அவர்கள்
கம்பீரமான நம் முனைவர் ஐயா அவர்களின் வலது காது !

மேளம் + நாயன கோஷ்டியினர்
VGK + முனைவர் ஐயா + பால கணேஷ்
15.03.2017 இரவு டின்னர் (பஃபே சிஸ்டம்)

மேற்படி படங்களில் சிலவற்றை தன் கேமராவில் எடுத்து
எனக்கு அனுப்பி வைத்து உதவிய என் அருமை நண்பர்
திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகள்.


அங்கிருந்த ஓரிரு மணி நேரங்களுக்குள், பதிவர்களும், பத்திரிகை எழுத்தாளர்களுமாக ஒரு சிலரை ஒருவருக்கொருவர் சந்திக்கவும், அறிமுகப்படுத்திக்கொள்ளவும், பேசி மகிழவும் முடிந்தது.  

அவர்களில் இப்போது என் நினைவுக்கு வருவோர்  (1) திரு. ரிஷபன் R. ஸ்ரீநிவாஸன் அவர்கள் (2) ஆரண்ய நிவாஸ் திரு. R. ராமமூர்த்தி (3) எல்லென் எனப்படும் திரு. R. லக்ஷ்மி நாராயணன் (4) திரு. பாஸ்கர் என்னும் கிருஷ்ணா (5) திரு. தி. தமிழ் இளங்கோ (6) திரு. பால கணேஷ் (7) வஸந்தமுல்லை திரு. ரவி  (8) அஷ்டாவதானி திருவாளர் மஹாலிங்கம் ஸார் அவர்கள் (9) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் (10) அடியேன் VGK 

பதிவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் அனைவரும் ஒன்றாக திருமண மேடையில் ஏறி தம்பதியினரை வாழ்த்தி ஆசீர்வதித்த புகைப்படம் இன்னும் எனக்கு வந்துசேரவில்லை. அதனால் அதனை இங்கு இப்போது காட்சிப்படுத்த என்னால் இயலவில்லை.

BHEL இல் என்னுடன் ஒரே இலாகாவில் வேலை பார்த்த பல்வேறு தோழர்களையும் தோழிகளையும், நீண்ட இடைவேளைக்குப்பின்  அன்று என்னால் சந்தித்துப் பேச முடிந்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். 

திரு. ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் மூத்த பெண் திருமணமும் இதே திருமண மண்டபத்தில் தான் 12.06.2013 அன்று நடைபெற்றது. அதைப்பற்றி நான் ஏற்கனவே என் பதிவினில் எழுதி வெளியிட்டிருந்தேன். அதற்கான இணைப்பு இதோ:  http://gopu1949.blogspot.in/2013/06/9.html

’ஆரண்யநிவாஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மற்றும் பலரையும் படத்தில் காண இதோ மற்றொரு இணைப்பு:  http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

நாங்கள் அவ்விடம் இரவு விருந்து சாப்பிட்டு முடிய 8.15 மணி ஆனது. பஃபேயில் ஏதேதோ பல உணவுப்பொருட்கள் இருப்பினும், நான் எனக்குப் பிடித்தமான பூரிகளையும், தயிர் சாதம் + வறுத்த மோர் மிளகாயையும் மட்டும் வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.  

பிறகு 8.30க்கு என் ஆஸ்தான ஆட்டோக்காரர் ஏழுமலை அவர்களை என் மொபைலில் அழைத்து வரவழைத்தேன்.  அதில் முனைவர் அவர்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில், கும்பல் அதிகம் இல்லாததோர் டவுன் பஸ்ஸில் அவரை அமரச்செய்து, அவரிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு, அதே ஆட்டோவில் நான் என் வீட்டுக்கு இரவு ஒன்பது மணிக்குள் வந்து சேர்ந்து விட்டேன்.

இரவு 10.30 மணிக்கு முனைவர் ஐயா அவர்களுடன் மொபைலில் பேசி, அவர் திருச்சி ஜங்ஷனிலிருந்து, செளகர்யமாக கோவை செல்ல வேண்டிய ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொண்டேன். மறுநாள் 16.03.2017 அதிகாலை 10 மணிக்குள் நான் மிகவும் சீக்கரமாகவே  எழுந்துகொண்டு, லேண்ட் லைன் போனில் முனைவர் ஐயா அவர்களின் சம்சாரத்துடன் பேசி, அவர் செளக்யமாக வீடு வந்து சேர்ந்து விட்டாரா என்பதையும் கேட்டு  உறுதி செய்துகொண்டேன். (அவர் நன்கு அசந்து தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்)

81+ வயதான இந்த இளைஞர், பேரெழுச்சியுடன் கோவையிலிருந்து தனியாகப் புறப்பட்டு, ஒரே நாளில்  6+6 = 12 மணி நேரங்கள் பயணம் செய்துள்ளார். அவரை நினைக்க எனக்கு மிகவும் வியப்பாகவும் பொறாமையாகவும் உள்ளது. அவரின் அன்பும், பண்பும், பழுத்த அனுபவங்களும், நகைச்சுவை உணர்வுகளும், மிகவும் வெளிப்படையான பேச்சுக்களும், ஓரளவு ஆரோக்யமான உடல்நிலையும் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பு ஏதும் இல்லை தானே !

நல்ல மனம் கொண்ட நம் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மேலும் பல்லாண்டுகள் இதேபோல பேரெழுச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கொள்கிறேன்.  


   என்றும் அன்புடன் தங்கள்,

 

(வை. கோபாலகிருஷ்ணன்)

Thursday, March 16, 2017

முனைவர் ஐயாவுடன் ஹாட்-ட்ரிக் சந்திப்பு - 15.03.2017


கோவையின் மிகப் பிரபல பதிவர்
முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுடன் 
மூன்றாம் முறையாக மீண்டும் ஓர் இனிய சந்திப்பு !

02.04.2014 முதல் வருகையினைக்காண
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html


10.10.2015 இரண்டாவது 
வருகையினைக் கண்டு களிக்க


நேற்று 15.03.2017 புதன்கிழமை 
மூன்றாவது முறையாக 
’ஹாட்-ட்ரிக்’ வருகை தந்து
மகிழ்வித்த போது ..... 


கடும் வெயிலில் மதியம் 12 மணிக்கு 
வீட்டுக்கு வந்தவரை வரவேற்று, 
கட்டிலில் அமர வைத்து, 
ஏ.ஸி.யையும், ஃபேனையும் போட்டு
  ‘தீர்த்தம்’ அளித்தபோது !


 

தீர்த்தம் சாப்பிடும்போது சைடு-டிஷ் ஆக
இருக்கட்டும் என்று நினைத்து அவர் அன்புடன் 
 கோவையிலிருந்து கொண்டுவந்து அளித்த 
ஏராளமான + தாராளமான தீனி ஐட்டம்ஸ் இதோ

 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்ப்பா
கால் கிலோவில் இரண்டு பாக்கெட்டுகள்
A1 நேத்திரங்காய் சிப்ஸ்  
100 கிராம் ஸ்பெஷல் பாக்கெட்
PARLE - MONACO - SIXER SALTED
BISCUITS 200 GRAMS SUPER PACK

எங்கள் வீட்டின் சார்பில் மதியம் ஒரு மணி சுமாருக்கு
பாயஸம், வாழைக்காய் பொடிமாஸ், பூசணிக்காய் கூட்டு, 
அப்பளம், சித்ரான்னம், சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, 
ரஸம், தயிர், மோர், ஊறுகாயுடன், நுனி இலையில்  
மதிய விருந்து அளித்தபோது


உண்ட களைப்புத் தொண்டனுக்கும் உண்டல்லவா!

மதியம் 2 மணி முதல் 4.00 மணி வரை சற்றே
ஓய்வாக கட்டிலில் கால் நீட்டிப் 
படுத்துக்கொண்டு விட்டார்கள்.


அதன்பின் பஜ்ஜி, வடை, உளுத்தம் போண்டாக்களுடன் 
சூடான ஃபில்டர் காஃபி அளித்து 
அவரை எழுச்சியுடன் எங்கள் கட்டடத்தின் 
உச்சிக்கே  கூட்டிச்சென்று 
உச்சிப்பிள்ளையாரைக் காட்டி
சற்று நேரம் உச்சி குளிர வைத்தேன்.


எங்கள் இல்லத்தில் எடுக்கப்பட்ட மிகவும் 
கேஷுவலான சில புகைப்படங்கள் 


 மாலை மிகச்சரியாக ஆறு மணிக்கு 
மாப்பிள்ளை போல சில்க் ஜிப்பா  + ஜரிகை வேஷ்டி அணிந்துகொண்டு என்னுடன் 
ஓர் முக்கியமான இடத்திற்குப் புறப்படத் தயாராகி விட்டார்.இவர் நேற்று திடீரென்று
திருச்சிக்கு எதற்காக வருகை தந்திருந்தார்?

மாலை 6 மணிக்கு 
சில்க் ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன்  
மாப்பிள்ளை போல ட்ரெஸ் செய்துகொண்டு
என்னுடன் எங்கு புறப்பட்டார்?

அங்கு வந்திருந்த இதர பதிவர்கள் 
யார் யாரை இவர் சந்தித்தார்?

அங்கு மேற்கொண்டு என்னதான் நடந்தது?

போன்ற மற்ற சுவையான விபரங்கள் 
இதன் அடுத்த பகுதியில் .....

தொடரும் 


Thursday, February 9, 2017

அதற்குள் ஓராண்டு ஓடிப்போனதே ! :(


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
09.02.2017


"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 

வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்

[ மறைவு: 09.02.2016  ]
http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html 


வலையுலக நட்பிலிருந்து
தாங்கள் 2016-ம் ஆண்டு முதல் 
பிரிந்து சென்றுவிட்டாலும் ....

2011 முதல் 2015 வரை, 
அடியேன் வெளியிட்டுள்ள 
என் 806 பதிவுகள் அனைத்திலும் உள்ள 
   பின்னூட்டங்களிலும்

எங்கள் நினைவலைகளிலும் நீங்கள் 
நிரந்தரமாக இன்றும் வாழ்ந்து வருகிறீர்கள்.

-oOo-

தங்களிடமிருந்து எனக்குக்  
கடைசியாக பின்னூட்டங்கள்
கிடைக்கப்பெற்ற நாள் : 31.12.2015
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

(சாதனையாளர்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு 

 100% பின்னூட்டப் போட்டி 2015)
 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!
  1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:24 AM

   வாங்கோ மேடம், வாங்கோ, வணக்கம்.

   //இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
   இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் !!//

   தங்களின் இனிமையான, ருசியான, தித்திக்கும் பொங்கல் போன்ற நல்வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

 2. போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி
  பரிகள் அளித்த சாதனையாளருக்கு
  இனிய நன்றிகள்..!!
  1. இராஜராஜேஸ்வரி December 31, 2015 at 8:26 AM

   //போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி பரிகள் அளித்த சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

   // போட்டிகள் வைத்து, திறம்பட நடத்தி...... //

   இதுவரை OK ... OK ...

   //ப ரி க ள் அளித்த//

   போட்டியில் கலந்துகொண்ட பந்தயக்குதிரைகளுக்கு நான் அளித்ததும் பரிகளா .... குதிரைகளா ?

   { பரி = ’குதிரை’ அல்லவா! }

   அதில் இருவரை மட்டும் நான் சண்டிக்குதிரைகள் என்று சொல்லியிருந்ததால், ஒருவேளை அதே சிந்தனையில் தாங்களும் இருந்து, ‘பரிசுகள் அளித்த’ என்பதைப் ’பரிகள் அளித்த’ என குதிரை வேகத்தில் எழுதியிருப்பீர்களோ என்னவோ !! :)

   //சாதனையாளருக்கு இனிய நன்றிகள்..!! //

   உண்மையில் இந்தப்போட்டியில் சாதனையாளர்கள் தாங்கள் எட்டுப் பேர்கள் மட்டும் அல்லவா. உங்கள் அனைவரையும் அடையாளம் காட்டி சிறப்பிக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது, இந்த மிகச் சாதாரணமானவனின் பெரும் பாக்யமே.

   என்னையும் இங்கு தாங்கள் ஒரு சாதனையாளர் ஆக்கியுள்ளதற்கும், தங்களின் இனிய நன்றிக்கும், என் இதயம் கனிந்த நன்றிகள், மேடம்.

  oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

2015ம் ஆண்டு என் வலைத்தளத்தினில் நடைபெற்ற 
100% பின்னூட்டமிடும் போட்டியில் 
வெற்றிவாகை சூடிய தங்களுக்கான 
பரிசுப்பொருட்களை 29.10.2015 அன்றே
தங்களுக்கு கொரியர் மூலம் என்னால்
அனுப்பி வைக்க முடிந்ததில் 
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

அதற்குத் தாங்கள் சந்தோஷமாக எனக்கு 
அனுப்பியுள்ள  கடைசி மெயில் செய்தி:
30/10/2015
to me

’ஸ்பெஷல் கிஃப்ட்’ உள்பட அனைத்தும் கிடைக்கப்பெற்றேன்.

என்றும் பிரிக்காமல் பொக்கிஷமாகப் பாதுகாப்போம்.

வெள்ளிக்கிழமையும் அதுவுமாக அரவிந்த்குமாருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் இல்லத்துக்கு வந்து, உப்பு மஞ்சள் வாங்கிய திருநாளில் வெள்ளிக்காசு கிடைக்கப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது .. நிறைந்த நன்றிகள்..


oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

நினைவை விட்டு என்றும் நீங்காத
மற்ற சில பதிவுகளின் இணைப்புகள்:

2011

http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி! 

[2011 இந்த வருடத்தில் நான் ]


2012


ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்.

2013

ஆயிரம் நிலவே வா! .... ஓர் ஆயிரம் நிலவே வா !!

2014  
சிறுகதை விமர்சனப் போட்டிகள்


   

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

ஒட்டுமொத்த ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் பட்டியல்

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-01 to VGK-10

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-11 to VGK-20

பரிசு மழை பற்றியதோர் அலசல் - VGK-21 to VGK-30

பரிசு மழை பற்றியதோர் ஒட்டுமொத்த அலசல் 
 VGK-31 to VGK-40

போட்டி பற்றிய பல்வேறு அலசல்களும் புள்ளி விபரங்களும் VGK-01 to VGK-40


சிறுகதை  விமர்சனப் போட்டிகளில் 
தங்களின் மகத்தான 
28 வெற்றிகள்.

முதல் பரிசு பெற்றவை


  

காதலாவது கத்திரிக்காயாவது ....

அமுதைப்பொழியும் நிலவே

அஞ்சலை

வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !! 

முன்னெச்சரிக்கை முகுந்தன்

தாயுமானவள்

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா ?

அவன் போட்ட கணக்கு

வாய் விட்டுச் சிரித்தால்

மாமியார்
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html


இரண்டாம் பரிசு பெற்றவை
மறக்க மனம் கூடுதில்லையே

உண்மை சற்றே வெண்மை

சூழ்நிலை

வடிகால்

அட்டெண்டர் ஆறுமுகம்

சகுனம்

’எலி’ஸபத் டவர்ஸ்


மூன்றாம் பரிசு பெற்றவை

காதல் வங்கி

உடம்பெல்லாம் உப்புச்சீடை

நீ .... முன்னாலே போனா .... நா .... பின்னாலே வாரேன் !

அழைப்பு

மூக்குத்தி

யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !

முதிர்ந்த பார்வை

எல்லோருக்கும் பெய்யும் மழை

பூபாலன்

எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...
ஜாதிப்பூ


 2015      
 100% பின்னூட்டப்போட்டி - 2015

http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_16.html

சாதனையாளர் விருது  
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 


                                            http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html

சாதனையாளர்களின் 
ஒட்டுமொத்த அணிவகுப்பு.  


    

2016


கிட்டத்தட்ட சமவயதில் இருந்த நாம் இருவருமே 
2011 ஜனவரி முதல் வலைப்பதிவு ஆரம்பித்து தொடர்ச்சியாக அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பதிவுகள் கொடுத்து வந்தோம்.  

மிகச்சிறந்த அறிவாளியாகவும், 
ஆன்மீக அத்தாரிட்டியாகவும், 
தெய்வாம்சம் நிறைந்த பதிவராகவும், 
மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் கொடுப்பவராகவும் உங்களை நான் எனக்குள் நினைத்து 
மகிழ்ந்து கொண்டிருந்தேன். 

தங்களின் எதிர்பாராத திடீர் மறைவு 
எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 
என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது.  

தாங்கள் இனி பின்னூட்டமிட 
வரப்போவது இல்லை என்று தெரிந்ததும், 
நானும் என் வலைத்தளத்தினில் புதிய பதிவுகள் ஏதும் வெளியிட ஆர்வமில்லாமல் இருந்துவிட்டேன். 

2016 + 2017ம் ஆண்டுகளில் ஒருசில  
தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால் மட்டுமே, 
நேற்றுவரை அதுவும் வெறும் 33+3=36 பதிவுகள் மட்டுமே என்னால் வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது.

அவைகளில் பெரும்பாலானவைகள் 
20 + 2 + 6 = 28 out of 36 ] 
பிற பதிவர்களான நம் 
திரு. ஜீவி ஸார் அவர்கள் (20), 
திரு. சிட்டுக்குருவி விமலன் அவர்கள் (2),
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் (6) 
ஆகியோரின்  நூல் அறிமுகங்களாகும். 

மேலும்  1+1+3 = 5 பதிவுகள் 
திருமதி. மனோ சுவாமிநாதன் தம்பதியினர் + 
திரு. தி. தமிழ் இளங்கோ ஸார் +
அஷ்டாவதானி திரு. மெளலி ஸார் 
ஆகியோரின் 
’பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள்’ பற்றியதாகும்.  

தாங்கள் வருகை தராமல் நான் வெளியிட்டுள்ள 
அந்த 33+3 = 36 பதிவுகள் ஒவ்வொன்றிலும்கூட, 
தங்களின் நினைவாகத் ’தாமரை’ 
மலர்களைக் காட்டியே 
என் பதிவுகளை நிறைவு செய்து, 
நான் எனக்குள் ஓர் ஆறுதல் அடைந்துள்ளேன். 

ஓர் விநாயகர் சதுர்த்தியன்று தாங்கள் பிறந்ததாக
என்னிடம் சொல்லியிருந்தீர்கள் !

ஆன்மீக உலகுக்கு 
முழுமுதற் கடவுளாம் 
விநாயகர் போலவே,

வலைப்பதிவு உலகில் 
தங்களின் புகழும், நினைவுகளும் 
என்றும் நீடித்து நிற்கும் !
பரம பக்தையானத் தங்களுக்கு 
இறைவனின் திருவடிகளைச் சீக்கரமாக அடைய 
மிகச்சுலபமாக விசா கிடைத்து விட்டது.

எனக்கான அந்த விசா கிடைக்க 
எப்போது ப்ராப்தமோ தெரியவில்லை!

அதுவரை 
"வாசிப்பது என்பது சுவாசிப்பது ! 
வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள் !!”
என்ற தங்களின் வழிகாட்டுதல்களின்படி

பின்னூட்டங்கள் + விமர்சனங்கள் உள்பட
உங்களின் பழைய எழுத்துக்களையும் 

பிற பதிவர்களின் புதிய எழுத்துக்களையும் 
என்னால் இயன்றவரை
வாசித்துக்கொண்டிருக்கிறேன். 
என்றும் நீங்காத நினைவுகளுடன்


      
VGK